https://docs.google.com/forms/d/1zpqtWr6zkMHRg6U6R5OwSyNZfeQwkqQzOId-1jhWqCU/edit?chromeless=1
Sunday, June 25, 2023
அதிபர் ஒரு போதனா தலைவராக
அதிபர் போதனா தலைவர் என்ற வகையில்
போதனா தலைமைத்துவம் என்பது கல்வி வழங்கும் நிறுவனம் ஒன்றின் கல்வி வழங்கும் செயல் முறையில் அதாவது கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மாணவர் மதிப்பீடு, கணிப்பீடு மற்றும் மாணவர் அடைவு மட்டத்தை உயர்ந்த நிலையில் பேணுதல் ஆகிய பணிகளுக்காக அதிபர் முதன்மை நிலையை வழங்கி செயற்படுதலை குறித்து நிற்கின்றது.
பிரட் சி. லுன்பேர்க் (2010) கின் கூற்றுப்படி அதிபர்களின் போதனா தலைமைத்துவம் அதிகளவில் வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது. மேலும் ஒரு பாடசாலையின் முழுமையான பயன்படுதன்மையையும் பாடசாலையின் வளர்ச்சியையும் தீர்மானிக்கின்ற ஒரு தீர்க்கமான காரணி அதிபரின் போதனா தலைமைத்துவமாகும்.
போதனா தலைமைத்துவம் பாடசாலை அதிபர்கள் நிர்வாக மற்றும் பணியகவாட்சிசார் செயற்பாடுகளுடன் மாத்திரம் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் அதிலிருந்து கணிசமான அளவில் விலகி பாடசாலையில் இடம்பெறும் கல்விசார் பணிகளில் பங்கெடுத்தலாக அமையும்.
போதனா தலைமைத்துவம் எண்ணக்கரு வளர்ச்சி
1980 களில் தோற்றம் பெற்ற வளர்ச்சியடைந்த கல்வி முகாமைத்துவத்துடன் தொடர்பான ஓர் எண்ணக்கருவாகும். கல்வித்துறையில் விளைகிறனான அல்லது பயன் தரும் பாடசாலை என்ற எண்ணக்கரு வளர்ச்சியுடன் இணைந்து உருவாகலாயிற்று. 1990 களில் பிரபல்யமடையத் தொடங்கிய பாடசாலை மட்ட முகாமைத்துவ இயக்கம் பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டத்திற்கு பாடசாலையே வகை கூற வேண்டுமென்ற நிலை ஏற்பட்டதுடன் இந்த எண்ணக்கரு மேலும் வலுவடையத் தொடங்கியது.
போதனா தலைமைத்துவம் பற்றிய ஆய்வு முடிவுகள்
பாடசாலை அதிபர் பாடசாலையில் இடம் பெறும் போதனைச் செயன்முறைக்கும் அதன் வெளியீட்டிற்கும் பூரண பொறுப்பாளியானவர் என்பதால் அவர் பணிகள் சார் விடயத்திற்கு கூடுதலான நேரத்தையும் கவனத்தையும் செலுத்துதல் வேண்டும். ஆயினும் அதிபர்கள் தமது நேரத்தில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தையே பாடசாலையில் கல்வி சார் பணிகளுக்கு செலவு செய்கின்றனர். பாடசாலையில் அதிபர்கள் விரும்பியோ விரும்பாமலோ நிர்வாகி, முகாமியாளர் மற்றும் போதனா தலைவர் என்ற வகிபாகங்களை வகிக்க வேண்டியுள்ளது. அவர்கள் இந்த மூன்று பிரதான வகிபாகங்களுக்கும் இடையில் ஒரு சமநிலையை பேண வேண்டியவராகும்.
போதனா தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ளல்
☝கல்வியுடன் தொடர்பான துறையில் வான்மைத்துவம் பெறல்
💧கல்வி கோட்பாடுகள் தத்துவம்
💧கலைத்திட்டம்
💧கல்வி உளவியல்
💧கல்வியுடன் தொடர்பான சமூக பொருளாதார சிந்தனைகள்
💧கற்றல் கற்பித்தல் முறைகள்
💧மதிப்பீடு கணிப்பீடு போன்றன
💧கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமகால கல்வி முறைமை கல்வியின் நவீன போக்குகள்
போதனா தலைவருக்குரிய திறன்கள்
போதனா தலைவர்கள் 4 வகையான திறன்கள் ஐக் கொண்டிருக்க வேண்டும்
1. ஆளுடைத் தொடர்பு திறன்கள்
2. திட்டமிடல் திறன்கள்
3. போதனா அவதானிப்பு திறன்கள்
4. ஆய்வு மற்றும் மதிப்பீடு திறன்கள்
நான்கு திறன்கள்
1.கற்றல் வளங்களை வழங்கும் திறன்
2. போதித்தவர் திறன்
3. தொடர்பாடல் திறன்
4. கற்றல் கற்பித்தல் உடன் தொடர்பான செயற்பாட்டுத் திறன்
டஇயஉபஓர் என்பவர் ஒருவர் சிறந்த போதனா தலைவராக திகழ பின்வரும் மூன்று துறைகளில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்கின்றார்
1. கலைத்திட்டம்
2. அறிவுறுத்தல் அல்லது போதனை செய்தல்
3. கணிப்பிடல்
சமகாலத்தில் பாடசாலை என்ற கல்வி நிறுவனத்திற்கும் தலைமைத்துவம் வழங்குபவர் போதனை தலைவராக செயல்படும் வகிபாகத்திற்கு முதலிடத்தையும் முகாமையாளராக செயல்படும் வகிபாகத்திற்கு இரண்டாம் இடத்தையும் நிர்வாகியாக செயல்படும் வகிபாகத்திற்கு மூன்றாம் இடத்தையும் வழங்குதல் வேண்டும்
வகுப்பறை முகாமைத்துவம்
வகுப்பறை முகாமைத்துவம்
ஏதேனும் கற்றல் செயற்பாட்டில் மாணவர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆசிரியர் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் வகுப்பறை முகாமைத்துவமாகும். ( F.C Whage வகுப்பறை முகாமைத்துவம் கட்டுப்பாடும்)
வகுப்பறை முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்
💦கற்றலுக்கு உகந்த பௌதிக சூழலையும் உளவியல் சூழலையும் உருவாக்குதல்
💦கற்றலுக்கு தடையாக அல்லது இடையூறாக இருக்கும் காரணிகளை ஆகக் குறைந்த மட்டத்திற்கு கொண்டுவரல்
💦கற்றலுக்கு தேவையான சகல அத்தியாவசிய வசதிகளையும் ஒன்று சேர்த்தல்
💦வகுப்பறைக்குள் ஓர் கற்கும் சூழலை உருவாக்கல்
💦வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய பௌதிக அம்சங்களை ஒழுங்குபடுத்தல், ஏற்பாடு செய்தல்
💦மாணவர் செயற்பாடுகளுக்கு ஏற்பாடுகளை செய்தல்
💦நல்ல உறவை பெற்றுக்கொள்ளல்
💦மாணவர் ஆசிரியர் உறுதியான இணைப்பை பேனல்
வகுப்பறை முகாமைத்துவத்தில் ஆசிரியரின் வகிபாகம்
💧வகுப்பறை பணிகளை பகுப்பாய்வு செய்த ஆசிரியர்களே மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான நடைமுறைகளை தீர்மானிக்கும் வகிபாகம்
💧வகுப்பறையில் கற்றலுக்கு சாதகமான பௌதிக சூழலையும் சமூக சூழலையும் உருவாக்கும் வகிவாகம்
💧முறைமைக்கு அச்சுறுத்தலாக அமையும் மாணவர்கள் அது மாணவர் நடத்தைகளை கண்காணித்து உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுப்பவர் வினைத்திறன் மிக்க வகுப்பறை முகாமையாளர்களாக செயற்படும் வகிபாகம்
💧வகுப்பறையில் உள்ள மாணவர்களை அன்பாலும் கண்டிப்பாலும் நல்ல நடத்தைகள் உடையவர்களாக மாற்றி அமைக்கும் வகிபாகம்
💧வகுப்பறையில் சிக்கல்களைப் படிப்படியாக குறைப்பதற்கு தேவையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குபவர்கள் வினைத்திறன் மிக்க வகுப்பறை முகாமைத்துவத்தை கொண்டு நடத்துபவர்
💧போதனா செயன்முறையை ஒழுங்கமைத்து மாணவர்களை கல்வி சார் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வைத்திருக்கும் ஆசிரியர்கள் வினைத்திறன் மிக்க வகுப்பறை முகாமையாளர்கள்
💧வினைத்திறன் மிக்க வகுப்பறை முகாமியாளராக விளங்கிய ஆசிரியர்கள் வகுப்பறையில் நடைமுறைக்கு சாத்தியமான ஏற்பாடுகளை உருவாக்கியதுடன் கல்வி ஆண்டின் முதல் நாள் அன்று கற்பித்தல் பணியில் ஈடுபடுபவராகும்
💧 வருட ஆரம்பத்தில் தாபிக்கப்படுகின்ற வகுப்பறை ஒழுங்குகள் தேவையேற்படும் போது அதன் செயல்பாடுகள் மூலம் வலுப்பெறும் வகையில் மாற்றியமைக்கும் ஆசிரியர் வினைத்திறன் மிக்க வகுப்பறை முகாமியாளராகும்
💧தனது பணியில் முழு கவனத்தை செலுத்திய பொருத்தமான நடத்தையை கொண்டிருந்த உயர்வான அடைவு மட்டத்தைக் காட்டிய மாணவர்களைக் கொண்ட ஆசிரியர்கள் கற்பித்தலிலும் சமூகத் திறன்களை கொண்டிருப்பவர் (Hardin,2008).
வகுப்பறை முகாமைத்துவத்தில் உள்ள பிரச்சனைகள்
👅மாணவர் நடத்தைப் பிறழ்வுகளை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
👅 வகுப்பறை இட வசதி இன்மை
👅அதிகளவான மாணவர்கள் உள்ள வகுப்பறைகள்
👅நெருக்கமாக அமைந்துள்ள வகுப்பறைகள்
👅ஆசிரியர் தனக்கு தேவையான வகையில் வகுப்பறையின் கட்டமைவை மாற்றுவதற்கு பாடசாலையின் முகாமைத்துவம் அனுமதி மறுத்தல்.
திட்டமிடல்
திட்டமிடலின் செயலன்முறைகள்
1. நிலைமை பகுப்பாய்வு
2. எதிர்காலத்திற்கான திட்ட வடிவமைப்பை மேற்கொள்ளல்
3. திட்டமிடல்
4. திட்டத்தை ஏற்கச் செய்தல்
5. திட்ட அமுலாக்கமும் கண்காணிப்பும்
6. திட்ட மதிப்பீடு
நிலைமை பகுப்பாய்வு:-
ஒழுங்கமைப்பின் சமகால நிலைமையை கண்டறியும் கட்டம் இதுவாகும். இதற்காக பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தலாம். செயலுபாய திட்டமிடலுக்கு தேவையான தரவுகள் தகவல்கள் பெறவும் அதனை அடிப்படையாகக் கொண்டு சமகாலத்தில் ஒழுங்கமைப்பு கொண்டுள்ள பலம்,பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை இனங்காணலாம். அதற்காக முகாமைத்துவ சிந்தனையாளர்களால் பயன்படுத்தப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ளவற்றில் மிகப் பொருத்தமானவற்றை பயன்படுத்துதல் இடம் பெறும்.
பாடசாலை மட்ட திட்டமிடலுக்காக பாடசாலையின் சமகால நிலை பாடசாலை சூழல் மற்றும் சமூகம் கல்விக் கொள்கைகளை குறிப்பாக தீர்மானித்தல் வளங்களை இனம் காணுதல் SWOT பகுப்பாய்வு பற்றி குறித்து விளக்கி இருப்பதை கூடுதலாக கவனத்தில் கொள்ளலாம். இதைத் தவிர பாடசாலையின் உள்ளக மற்றும் வெளியக மதிப்பீட்டறிக்கைகள் மேற்பார்வை அறிக்கைகள் கலந்துரையாடலில் வினா கொத்துக்களில் அவதானிப்பு அட்டவணை மற்றும் ஆவண ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகள் தகவல்களை கொண்டு சமகால நிலைமையை பகுப்பாய்வு செய்யலாம்.
எதிர்காலத்திற்கான திட்ட வடிவமைப்பு:-
முன் திட்டமிட்டல் அல்லது திட்ட வரைபு எனவும் குறிப்பிடப்படும் கட்டம் கொள்கை இலக்குகள் செயலபாயங்கள் குறிக்கோள்கள் அமுலாக்கல் நிகழ்ச்சித் திட்டங்களை முன்மொழிதல் எட்டவுள்ள இலக்குகள் அவற்றை அடைவதற்கான வளங்கள் முன்னுரிமை மற்றும் சாத்தியப்பாடுகளை பரிசீலித்தல்.
திட்டத் தயாரிப்பு:-
திட்டவடி வமைப்பில் பெறப்பட்ட முன்னுரிமை நீண்ட காலத்தில் அடைய எதிர்பார்க்கும் இலக்குகளை உள்ளடக்கிய நீண்டகால திட்டத்தையும் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய வருடாந்த அமுலாக்கல் திட்டத்தையும் தயாரித்தல்.
திட்டத்தை ஏற்கச் செய்தல்:-
திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதை அனுமதித்துக் கொள்ளும் கட்டமாகும். திட்டத்தை அமுலாக்குவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை தனது மேற்பார்வையாளரின் பார்வைக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளல்.
திட்ட அமுலாக்கமும் கண்காணிப்பும்:-
வருடாந்த அமுலாக்கல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள இலக்கை அடைவதற்கான செயல்பாடுகளை ஆரம்பித்தல். அவை திட்டமிட்டவாறும் இலக்கை நோக்கி அடைவதையும் உறுதி செய்யும் பொருட்டு கண்காணித்தல் மீளாய்வு கூட்டங்கள் முன்னேற்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ளல் பின்னூட்டல்களை மேற்கொள்ளல் தேவைப்படின் மாற்றங்களையும் திருத்தங்களையும் மேற்கொள்ளல் என்பன இடம் பெறும்.
திட்ட மதிப்பீடு:-
திட்ட அமுலாக்கலின் பின்னர் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள் அடையப்பட்டுள்ளது எந்த அளவு எதிர்பார்க்கப்பட்ட பலாபலன் கிட்டியுள்ளது. ஏற்பட்ட செலவுக்கு கிடைத்த பலாபலன் வாடிக்கையாளர் பெற்ற திருப்தி திட்டத்தின் பயனுடைமை என்பவற்றை ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு வடிவங்களை அல்லது மதிப்பீட்டு உபகரணங்களை பயன்படுத்தி மதிப்பீடு செய்தல் வேண்டும். கடந்த வருடங்களில் பெற்ற பெறுபேறுகள் அல்லது அடைவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தும் திட்டத்தின் வெற்றியை மதிப்பிடலாம்.
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில் சார் ஆசிரியர் அபிவிருத்தி
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில் சார் ஆசிரியர் அபிவிருத்தி
தொடர்ச்சியாக மாற்றமடையும் உலகில் பரந்த சமூகத்தின் சவால்களுக்கு ஏற்ப கல்வியை வழங்குதல் மிகவும் சிக்கலான ஒன்று என்பதால் ஆசிரியரின் பணியானது மாற்றமடைய வேண்டுமென்பதால் அடிப்படை ஆசிரியர் பயிற்சிக்கு மேலதிகமாக தொடர்ச்சியான தொழில் அபிவிருத்தி அத்தியாவசியமாகின்றது.
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் தொழில்சார் அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பாக கல்வி அமைச்சினால் அவ்வப்போது பல்வேறு சுற்றுநிருபங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பன வெளியிடப்பட்டுள்ளன.
பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில் சார் ஆசிரியர் அபிவிருத்தி தொடர்பாக அதிபரின் பணிகள்:
💦தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்திக் குழுவையும் அதற்குரிய உப குழுக்களையும் நியமித்தல்.
💦ஆசிரியர் அபிவிருத்தி தேவைகளுக்கென முன்மொழிவுகளை பெற்றுக் கொள்ளுதல்.
💦முன்மொழிவுகளை வகைப்படுத்தி தேவைகளை முன்னுரிமைப்படுத்துதல்.
💦பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தல்.
💦அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டுதல்.
💦வளநபர் பட்டியல் ஒன்றை தற்காலப்படுத்தி பேணுதல்.
💦தேவையான அபிவிருத்தி உபகரணங்களை தயாரித்துக் கொள்வதற்கு வசதிகளை வழங்குதல்.
💦தொழில்சார் அபிவிருத்தி செயலமர்வுகளில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்
💦செயலமர்வுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் மேலதிக கூட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுத்தலும் அறிக்கைகளை வைத்துக் கொள்ளுதலும்.
பாடசாலை கல்வியில் பண்பு தர உறுதிப்பாடு
பாடசாலை கல்வியில் பண்பு தர உறுதிப்பாடு
Quality assurance in school education
பண்பு தரம் என்பது,
💧வாழ்க்கையாளர்களை திருப்தியடையச் செய்தல்
💧பயன்பாட்டுக்கான தகுதி
💧இனங்காணப்பட்ட தேவையொன்றை பூர்த்தி செய்ய இயலுதல்
பண்புத் தரத்தினை அண்மித்துக் கொள்ளுதல்
பண்பு சார் விருத்தி என்பது நிறுவனமொன்றின் பிரஜைகள் தமது கூட்டு முயற்சினூடாக மாத்திரம் அடைந்து கொள்ளக் கூடிய நிலைமையொன்றாகும்.
வெளியில் இருந்து இதற்கு உதவியும் வழிகாட்டலும் மாத்திரம் வழங்க முடியும்.
பண்புத் தரத்தின் குறைபாடுகள்
குறைபாடுகள்:
1. குறைந்த மட்டத்திலான குறைபாடுகள்
2. பரந்த மட்டத்திலான குறைபாடுகள்
3. ஆபத்தான குறைபாடுகள்
குறைபாடுகளுக்கான காரணம்:
*தெளிவின்மை
* அலட்சியம்
* போதுமான திட்டமிட்டே
* போதுமான அறிவுறுத்தல் இல்லாமை
மதிப்பீடு என்பது?
✓நாம் சரியானதைச் செய்கின்றோமா?
✓அதை நாம் சரியாகச் செய்கின்றோமா?
✓அதை நாம் சிறப்பான வழிகளில் செய்கின்றோமா?
மதிப்பீடு செய்வதன் நோக்கங்கள்
1. சிறந்த செயற்பாடுகளை இனங்காணுதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஊக்கமளித்தல்.
2. பண்புத் தரத்தினை மென்மேலும் விருத்தி செய்வதை மேம்படுத்தல்
3. சுய மதிப்பீட்டையும் தொடர்ச்சியான அபிவிருத்தியையும் மேம்படுத்தல்
4. அண்ணளவாக கல்விப்புலத்தின் பண்புத்தரம் தொடர்பான உத்திரவாதத்தை வழங்குதல்
5. அனைத்துப் பாடசாலைகளையும் தத்தமது செயற்படும் தன்மை தொடர்பாக தாமாகவே புரிந்துகொள்வதற்கு ஊக்கமளித்தல்
தேர்ச்சி என்பது என்ன?
விசேட குறிக்கோள் ஒன்றினை அடைந்து கொள்வதற்காக தன்னகத்தே காணப்படும் ஆற்றல்களை தேர்ச்சி எனக் கொள்ளலாம்.
ஏதாவதொரு பணியினை வெற்றிகரமாகவும் விளைதிறன் மிக்கதாகவும் ஆற்றுவதற்கு தம் வசமுள்ள ஆற்றல்
பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் செயற்படுவதற்காக இருக்கக்கூடிய அறிவு மற்றும் திறன்களின் அளவு
`பல்வேறு மதிப்பீடுகளும் பரீட்சைகள்ளும்
✓விசாரணை ~ தவறுகள் தொடர்பாக தேடியறிதல்
✓கணக்காய்வு ~ காலந்தாழ்த்துதால் ஏற்படும் குறைபாடுகள்
✓கண்காணிப்பு ~ முன்னேற்றத்தைக் கேட்டறிதல்
✓மதிப்பீடு ~ செயலாற்றுகை மற்றும் வெற்றிகளைக் கேட்டறிதல்
✓ஆய்வு ~ தற்போதைய நிலைமையை ஆய்ந்தறிந்து கொள்ளுதல்
Saturday, June 24, 2023
விசேட கல்வியும் உட்படுத்தல் கல்வியும்
விசேட கல்வியும் உட்படுத்தல் கல்வியும்
உட்படுத்தல் கல்வியின் ஊடாக இடம்பெறுவது அனைவருக்கும் கல்வி எனும் வாய்ப்பினை யதார்த்தமாக்கிக் கொள்வதாகும். அனைத்து வரைவிலக்கணங்களிலும் கூறப்படுவதாவது மேம்படுத்தப்பட்ட சமூகம் சார் மற்றும் கற்றல் வாய்ப்பினை சம வயது பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் அனைத்து செயற்பாடுகளுடன் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குதல் என்பதாகும். உட்படுத்தல் கல்வியின் கருப்பொருளாவது அனைவருக்கும் கற்பதற்கான உரிமை உண்டு என்பதன் கருத்தாகும். அனைத்து பிள்ளைகளையும் சாதாரண வகுப்பினுள் பிள்ளை மிகவும் விரும்பும் பாங்கு மற்றும் மூலோபாயங்களில் பிள்ளையின் பல்வகைமைக்கு ஏற்புடைய கற்றலைத் திட்டமிடுவதனூடாக கல்வியை வழங்குதல் என்பது உட்படுத்தல் கல்வியாகும்.
உட்படுத்தல் கல்வி எதற்காக?
✷பாடசாலைக்கு அனுமதிக்கப்படாத பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதித்து கல்வி உரிமையை உறுதிப்படுத்தல்.
✶விசேடக் கல்வித் தேவைகள் உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு உள்வாங்கி அவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தல்.
✷பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தல்.
கல்விச் செயற்பாடுகளில் உள்ள அனைத்து நடைமுறைகளுக்கும் சாதாரண வகையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பினை அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் அதிபர் உட்பட அனைவரதும் பொறுப்பாகும். இதன்போது விசேடத் தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதைப் போன்றே விசேடத் கல்விப் பிரிவினுள் கற்றலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதைப் போன்றே விசேடக் கல்விப் பிரிவினுள் கற்றலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதைப் போன்றே சாதாரண வகுப்பறைகளுக்கு உட்படுத்தலை மேற்கொள்ளுதல் வேண்டும்.
பாடசாலையில் நடைமுறையில் உள்ள குழுக்கள்
பாடசாலையில் உள்ள குழுக்கள்
பிரதான குழுக்கள்
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு
பாடசாலை முகாமைத்துவக் குழு
பாடசாலை கொள்வனவுக் குழு
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு
ஒழுக்காற்றுக் குழு
பாடசாலை உள்ளக மதிப்பீட்டுக் குழு
கட்டாயக் கல்விக் குழு
பாட அபிவிருத்திக் குழு
உப குழுக்கள்
பாடசாலை உணவுக் குழு
பாடசாலை சுகாதாரக் குழு
பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மைத்துவ அபிவிருத்தி
அனர்த்த முகாமைத்துவ குழு
விளையாட்டு முகாமைத்துவக் குழு
பரீட்சை ஒழுங்கமைப்புக் குழு
பாடசாலை நூலகக் குழு
பேண்தகு கல்விக்குழு
சிறுவர் பாதுகாப்புக் குழு
நலனோம்பல் குழு
Monday, June 12, 2023
Friday, June 9, 2023
Palmyrah distillery effectiveness in plant growth
Researcher. Mrs. Jeevaki Uthisthiran
Faculty of Agriculture.
University of Jaffna
Evaluate the effectiveness of Palmyrah distillery spent wash on growth and yield of leafy vegetables.
Abstract
Food security is meant for food for all and to make available balanced food to all to live a healthy life. Despite the problems encountered due to pesticides hazards, crop farming is expected to produce adequate, safer and healthy food to lead a health world. The building blocks of the food security are home garden as it enables to produce food by themselves in a small scale at household level through home gardens. Producing green vegetables is one such motive to supplement nutrient requirement in the day to day diet. People living in coastal areas require green vegetables in their diet as they generally consume sea food due to their availability. Hence this research was focused to develop a productive unit using the wastes and locally available materials to promote consumption of supplementary non fish diets. In experiment containers were prepared using used bicycle rims or tyres and palmyrah petioles and 1:1 ratio of cow dung and soil were mixed and kept in those productive units. Amaranthus, Alternanthera and Centella were planted alone and in combination of two or three crops with DSW applied at weekly interval. The highest dry weight (83.51g) was obtained in combination of all three crops with DSW applied productive units than others. Insect pest incidence was less in DSW applied productive units than others.
Introduction
The world food production is aimed to provide food to all in the twenty-first century however the technological advancement is supplementing to increase the food production, the production has achieved certain limits and require another technological promotion to increase the production by many folds. This has been achieved quoting a special note from International Rice Research Institute released in August, 2013 that the rice production could be increased by four fold due to an invention of triggering deeper root development in certain rice lines.
On the other hand, farming communities in developing world are suffering with malnutrition due to less buying power as well as non-availability of these diversified food materials to them. This is commonly witnessed in Northern Province of Sri Lanka as the people have malnutrition and not consuming balanced food. Jaffna district is recorded to have moderate malnutrition among children and this is even more in Wanni areas.
At this state, it is essential to develop a mechanism to provide essential nutrition to the people and once such attempt is establishing “home gardens”, which will provide leadership to the children, diversify the environment, provide ample leafy vegetables and fruits for their food and generating income, provide a pleasant atmosphere to relax the stresses, serve as a school to the students to learn etc. Establishing home gardens in every home is the task and it is also highlighted in the “Mahinda chintana” the development plan of the government.
This research attempted to develop a production system in the coastal areas of Northern Province to provide a source of obtaining leafy vegetables for their consumption as they only include fish in their diet. The families living in coastal areas have very less resources other than the fishing facilities. The soil is sandy and this will not support to grow vegetable crops with less care. Considering the plight of the people living in these areas this research is focused on developing a ‘productive unit’ using locally available materials including the waste materials and to grow leafy vegetables in it.
Commonly available leafy vegetables such as Amaranthus spp. Centrella asiatica and Alternathera sessilis have to be grown in these sandy soil areas and these plants will provide supplementary nutrients and vitamins to the children and mothers. With this in background, the experiments were designed to develop containers using locally available materials and tested by growing different leafy vegetables. In addition, the liquid waste generated from the distillery units of palmyrah industries called as distillery spent wash was used to supplement and activate the production unit to grow leafy vegetables. With this, the following objectives are formed
Developing a container for the “Productive unit” using locally available and waste materials
Evaluating the potential of growing leafy vegetables in the productive unit
Materials and methods
Preparation of Containers
Being a modification of the previous containers, again locally available materials especially using palmyrah leaf petioles and used bicycle rim were used. Each Palmyrah leaf petioles were cut into 40 cm pieces. Used bicycle rim was used to keep the leaf petiole pieces intact at its periphery by wrapping them with the thin rope made from the used vehicle tyres (Plate 01).
The environment-friendly container made out from tyres, palmyrah leaves and used vehicle tyre ropes and these materials did not decompose easily therefore this unit can be used for longer days. Bottom of the container was closed with palmyrah leaves to retain the potting mixtures inside the container.
Plate 1: Pots made by using bicycle rim and palmyrah petiole
Potting
Soil and cattle manure were mixed at the ratio of 2: 1. Every pot was filled by 50 kg of this mixture.
Table 1: Pots arrangement
Pot number | Planted crops |
1 | Centrella spp |
2 | Alteranthera spp |
3 | Amaranthus spp |
4 | Centrella spp + Amaranthus spp |
5 | Centrella spp + Alteranthera spp |
6 | Alteranthera spp + Amaranthus spp |
7 | Centrella spp +Alteranthera spp+ Amaranthus spp |
Every mixture with plants were planted in two pots and arranged in two rows table. All pots were maintained by irrigating daily. Row 1 additionally was maintained by distillery spent wash at a weekly interval.
Preparation of Distillery spent wash
Distillery spent wash was collected from Thickam distillery unit at Vadamaradchi in Northern Province. Distillery spent wash was come out through waste pipe in the production of arrack by using palmyrah toddy. Distillery spent wash was diluted with water at the ratio of 1:3 and was applied in 2 liters per pot.
Data collection
Samples were collected weekly from the pots. pH, Electrical conductivity, Total dissolved solids were determined by using pH and EC meter.
After harvesting every species of crops fresh weight and dry weight per pots were weighted by using electrical balance.
Plate 2: Arrangement of containers
Every variety of plants were harvested from each pot and kept in separate bags. Each bag was weighted for their fresh and dry matter.
Result & discussion
Figure 1: Total dry weight per container
In Experiment, revealed that highest dry weight per pot was obtained for the combination of crops such as Amaranthus, Alternanthera and Centrella, which was very high and significantly different in the distillery spent wash (DSW) added pots compared to the same plants grown without distillery spent wash. This is because of the DSW is having high amount of N,P and K and other micro nutrients such as Ca and Zn other than this DSW is also consist high BOD and COD. Therefore, DSW will influence the biological activity of the media and nutrient solubility.
Figure 2: Mean pH versus duration
Pure DSW pH is 2.9 (acidic media). In this graph shows lower pH for DSW adding pots than not adding DSW.
Figure 3: Mean EC versus duration
Figure 4: Mean TDS versus duration
DSW was dark brown in color with high temperature, and has low pH and high ash content (Chauhan and Dikshit, 2006). DSW do not contain any toxic compounds, but rich in plant nutrients, organic carbon and proteinaceous substances in soluble form (Sathish Kumar et al (2013). Recycling valuable components such as organic matter, nitrogen (N), phosphors (P), potassium (K), and other nutrients and their suitability for land application (Ramasamy et al., 2007). TDS is higher to DSW added pots than not in normal pots due to the presence of more soluble forms of nutrients in DSW.
Very high concentration of chlorine, bicarbonate and sulphate were observed in DSW (Sathish Kumar et al., 2013). In the experiment EC is higher in DSW added pots than normal pots due to soluble forms of ions.
From second to third week and forth to fifth week plants uptake of nutrients was more than other weeks. Level of EC and TDS decreased in these weeks. Level of EC and TDS increased due to application of DSW and this lead to the plants death.
References
Chauhan and Dikshit , 2006 In: Sathish Kumar, S., Melchias, G., Saravanan, P. and Elizabeth, M. 2013. Distillery wastage spent wash for healthy bio fertilizer to modern Agriculture. International Journal of Recent scientific Research Vol. 4,Issue, pp.290- 293
Sathish Kumar, S., Melchias, G., Saravanan, P. and Elizabeth, M. 2013. Distillery wastage spent wash for healthy bio fertilizer to modern Agriculture. International Journal of Recent scientific Research Vol. 4,Issue, pp.290- 293.
Ramasamy et al., 2007 In: Sathish Kumar, S., Melchias, G., Saravanan, P. and Elizabeth, M. 2013. Distillery wastage spent wash for healthy bio fertilizer to modern Agriculture. International Journal of Recent scientific Research Vol. 4,Issue, pp.290- 293




